5ஆயிரம் கொடுப்பனவு பெற 2 ஆயிரம் செலவிட்ட மக்கள்!

Date:

உலக உணவுத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 2 ஆம் கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், தெல்லிப்பளை, நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், சங்கானை, மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு, 18918 பயனாளிகளுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் முதலாவது கொடுப்பனவாக 15000 ரூபா வழங்கப்பட்டது.

அதற்கான இரகசிய இலக்கம் குறுந்தகவல் ஊடாக தொலை பேசிகளுக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில், 2 கட்டக் கொடுப்பனவாக 5000 ரூபா இம்மாதம் 20 ஆம் திகதி முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சிலருக்கு மட்டுமே குறுந்தகவல் கிடைத்துள்ளது.

அதைனையடுத்து குறுந்தகவல் கிடைக்கப்பெறாதவர்கள் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு இன்று அழைக்கப்பட்டனர்.

அதற்கமைய 500 மேற்பட்ட பயனாளிகள் வருகை தந்திருந்தனர். அதில் அதிகமானவர்கள் வயோதிபர்களாக இருந்தமையால் அவர்கள் போக்குவரத்து மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது.

5000 ரூபா கொடுப்பனவைப்பெற 2000 ரூபா முச்சக்கர வண்டிக்கு கொடுத்து வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

இடைத்தேர்தல் தோல்விக்கு ஈரான் போரும் காரணமாக அமைந்திருக்கலாம்: ட்ரம்ப்

ஈரானுடனான போர், இடைக்காலத் தேர்தல்களில் தனது குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஒரு...

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம்; நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினர் ஜனநாயகக் கட்சியினர்

செவ்வாயன்று ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். செனட் மற்றும்...

தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க இந்தியா இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தாக –எம்.பி. இ. சிறிநாத் தெரிவிப்பு

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்