யாழ் மாவட்ட அரச அதிபர் விளையாட்டு அமைச்சின் செயலாளராக நியமனம்!

Date:

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக செயற்பட்ட க.மகேசன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய .எம்.எம்.பி.கே.மாயாதுன்ன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இருந்த எச்.கே.டி.டபிள்யூ.ஹபுஹின்ன, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் செயலர் ஓய்வு பெற்றதையடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டது.

எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கு செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிரிஷ் வழக்கில் நாமலுக்கு பிணை: ஆனாலும் சிறைவாசம் தொடரும்!

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03), சர்ச்சைக்குரிய 'கிரிஷ்'  பரிவர்த்தனை தொடர்பான...

TIN இலக்கத்திற்கு முண்டியடிக்கத் தேவையில்லை

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மக்கள் வரி செலுத்துவோர்...

நவம்பரில் 3 எரிவாயு கப்பல்கள் வருகின்றன!

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்