சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,111

Date:

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,111 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஆறு மாவட்டங்களில் 514 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் மோசமான வானிலை காரணமாக ஒரு வீடு இடிந்துள்ளதுடன் 130 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்