மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் தொழில் தேடிச் சென்ற 9 பேர் சிக்கினர்!

Date:

மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த 14 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்றை நேற்று மேற்கொண்ட சோதனையின் போது, சுற்றுலா விசாவில் தொழில் நோக்கத்திற்காக பயணித்த 9 பேர் அடையாளம் காணப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று (1) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இருந்த போதே குறித்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏர் ஏசியா விமானத்தில் நான்கு பெண்களும் ஐந்து ஆண்களும் மலேசியாவிற்கு இந்த மோசடியை மேற்கொண்ட நபர்களால் அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விரிவான விசாரணைகளை அடுத்து இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்