யாழில் சீறற்ற காலநிலையினால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்ததால் அருகில் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை உரிய சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொண்டு வருகின்றார்கள்
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், 200 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மரத்தினை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பாதுகாக்க தவறியமையினால் இந்த மரம் வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.
இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மையினால் வீதியில் யாரும் பயணிக்காத நிலையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இது பகல் வேளையிலோ அல்லது சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில் இடம் பெற்று இருந்தால் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கும்.
எனவே இந்த மரம் விழுந்தமைக்கு அரசஅதிகாரிகளை பொறுப்பு கூற வேண்டும். அத்தோடு எனது வீட்டின் மதிலில் இந்த மரம் விழுந்துள்ளதால் இந்த வீட்டு உரிமையாளருக்குரிய நஷ்டஈட்டினை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.