ஐ.தே.கவின் பொதுச்செயலாளராக ரவி கருணாநாயக்க?

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டு, தீவிர அரசியலுக்கு வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கருணாநாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையானோர் முன்மொழிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைக்கு ஆதரவான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கருணாநாயக்கவுடன் ஏற்கனவே இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நாளை (செவ்வாய்க்கிழமை) கருணாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக  ஹரின் பெர்னாண்டோவின் பெயர் முன்மொழியப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து, ஹரின் பெர்னாண்டோ இந்த ஆண்டு எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்குச் சென்றார்.

கருணாநாயக்க மற்றும் பெர்னாண்டோ ஆகிய இருவருமே பதவிகளை ஏற்க இணங்கினார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கருணாநாயக்க பெரும்பாலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். மத்திய வங்கி பிணை முறி மோசடியில் அவர் தீவிரமாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்