சென்னை காளிகாம்பாள் கோவிலில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம்

Date:

இயக்குநர் கண்ணன் இயக்கும் படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை ஹன்சிகா, சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு இயக்குநருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

கதாநாயகியை மையமாக வைத்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். முதன் முறையாக இந்த படத்தில் இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாகக் கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் நடைபெறுகிறது.

ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் என பிரபல நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...

தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை...

நிந்தவூரில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பாலர்களுக்கும் மகிழ்ச்சிப் பரிசுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்