கடலட்டை பண்ணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரி மதத்தலைவர்களை சந்திக்கும் மீனவர்கள்

Date:

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கடலட்டை பண்ணைகளை அமைக்கும் போது அதனை ஆய்வுக்குட்படுத்தி மேற்கொள்ளல், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடலட்டை பண்ணை தொடர்பாக பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரசியல் தலைவர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் கடலட்டை பண்ணை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மதத்தலைவர்களை சந்தித்து அவர்கள் மூலம் அரசியல் தலைவர்களை அணுகுவதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக கடற்றொழிளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததுடன் சகல மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 40 வயதானவர் கைது

13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு பிள்ளைகளின்...

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் சில மணிநேரத்தில் அறிவிக்கப்படலாம்: முக்கிய உள்ளடக்கங்களின் விபரம்!

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தத்தின் இறுதி வரைவு,...

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்