‘லிட்ரோ’ மற்றும் ‘லாஃப்’ ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
எரிவாயு தட்டுப்பாடு இன்றி வெளியிடப்படும் எனவும், ஏதேனும் ஒரு பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் நிறுவனத்திற்கு தெரிவிக்குமாறும் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லாஃப் காஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டியவிடம் வினவியபோது, நிறுவனம் எரிவாயுவையும் தட்டுப்பாடின்றி வழங்குவதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு வகையான எரிவாயுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.



