53 வயது வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்யும்படி 15 வயது சிறுமியை வற்புறுத்திய தகவல் உண்மையா?: பெற்றோர் பிணையில் விடுதலை!

Date:

நெதர்லாந்திலுள்ள 53 வயது நபரொருவரைத் திருமணம் செய்யுமாறும், அவருடன் நிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசுமாறும் பெற்றோர் வற்புறுத்தினர் என 15 வயதுச் சிறுமியொருவர் வழங்கிய வாக்குமூலம் தவறானது என்பது தெரிய வந்துள்ளது.

பெற்றோர் மீதான கோபத்தில் அப்படி தவறான வாக்குமூலம் வழங்கியதாக சிறுமி ஏற்றுக்கொண்டதையடுத்து, கைதாகிய பெற்றோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 15 வயதுச் சிறுமிக்கும், கல்வியங்காட்டை பூர்வீகமாக கொண்ட பிரான்ஸை சேர்ந்த 20 வயது இளைஞனிற்குமிடையில் ஏற்பட்ட பேஸ்புக் காதல் ஏற்பட்டிருந்தது. சில காலமாக இந்த காதல் நீடித்திருந்தது.

இந்த நிலையில், பிரான்சிலிருந்து கல்வியங்காடு வந்திருந்த 20 வயதான இளைஞன், 15 வயது காதலியுடன் தலைமறைவாகியிருந்தார். இது குறித்து அச்சுவேலி பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து,  இருவரும் கடந்த மாதம் 27ஆம் திகதி அச்சுவேலியில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சிறுமியிடம். சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினர், பொலிஸார் உட்பட பல தரப்பினரும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

நெதர்லாந்திலுள்ள 53 வயதான ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயல்கின்றனர் என இதன்போது சிறுமி குறிப்பிட்டுள்ளார். அவருடன் ‘வீடியோ’ அழைப்பு மூலம் உரையாட நிர்ப்பந்திப்பதாகவும் தனது வாக்குமூலத்தில் சிறுமி தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னை நிர்வாணமாக அவருடன் ‘வீடியோ’ அழைப்பில் பேசு வதற்கு பெற்றோர் அழுத்தம் கொடுத்தனர் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சிறுமியின் பெற்றோரும் கைதாகினர்.

சிறுமி பேத்தியாரின் பராமரிப்பில் தற்காலிக மாக ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கோபத்தில் தவறான வாக்குமூலம் வழங்கியதாக சிறுமி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து  சிறுமியின் பெற்றோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்