ஓமானிற்கு பணிப்பெண்ணாக சென்ற 3 வவுனியா பெண்கள் ஏஜென்சியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

Date:

வவுனியா கல்மடு பூம்புகார் பிரதேசத்தில் இருந்து கடந்த செப்ரெம்பர் மாதம் 17 திகதி குருநாகல் ஏஜென்சி மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாகவும், வேலை செல்லாமல் சாப்பாட்டிற்கு எவ்விதமான வசதியும் இல்லாமல் இருப்பதாகவும் பெண்களின் உறவினர் க.சந்திரிக்கா புஸ்பகுமாரி இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஒக்ரோபர் மாதம் 18 ம் திகதி பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் பொலிசார் 1 மாத தவணையில் தீர்வு பெற்றுதருவதாகவும் உறுதி அளித்திருந்தாலும், பொலிசார் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால்தான் ஊடகங்களுக்கு தகவலை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

குருநாகல் பாணகம பகுதியில் இருக்கின்ற முகமது நலீம் என்ற பிரயாண முகவர் மூலம் அனுப்பப்பட்ட பெண்களை திருப்பி நாட்டிற்கு அமைக்குமாறு கேட்டபோது முகவரோ 5 இலட்சம் பணம் தந்தால் மாத்திரம் திருப்பி நாட்டிற்கு அழைக்கலாம் என தெரிவித்ததாகவும் பொலிசார் தன்னை(முகமது நலீம்) ஒன்றும் செய்ய இயலாது என கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்