பொய்களைப் பரப்பவே ருவிட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்: பைடன் விமர்சனம்

Date:

பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ருவிட்டரை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பைடன் பேசும்போது, “இப்போது நாம் அனைவரும் எதைப் பற்றி கவலைப்படுகிறோம் என்றால், எலான் மஸ்க் ருவிட்டரை வாங்கி இருப்பதை பற்றிதான். ருவிட்டர் மூலம் பொய்களைப் பரப்பவே அவர் அதனை வாங்கியுள்ளார். ருவிட்டருக்கான எடிட்டர்கள் இனி அமெரிக்காவில் இருக்கப்போவது இல்லை. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதை எப்படி புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், “ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பயனர்கள் பரப்ப முடியும். வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்” என்று கூறினார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ருவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். எனினும், இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்ற நிலையில், ஒருவழியாக ருவிட்டர் உரிமை எலான் மஸ்க்கிடம் வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ருவிட்டரில் மிகப் பெரிய அளவில் லே ஓஃப் எனப்படும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்