ஆசிரியையின் போலி நிர்வாணப் படங்களை பகிர்ந்த 15 வயது பிக்கு மாணவனிற்கு அபராதம்!

Date:

பெண் ஆசிரியை ஒருவரின் மார்பிங் படங்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை இன்று விதிக்கப்பட்டுள்ளது.

கணினி குற்றவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 5000 ரூபா அபராதம் செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க மேலும் உத்தரவிட்டார்.

புகார்தாரரான 30 வயதுடைய பெண் ஆசிரியை ஒருவர் தொற்றுநோய் பரவிய காலத்தில் ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் டியூஷன் வகுப்புகளை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களிடையே பிரபலமடைந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் வாட்ஸ்அப் மூலம் போலி நிர்வாண படங்களைப் பகிர்ந்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார்.

விசாரணைகளை அடுத்து, எம்பிலிப்பிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் கடமையாற்றும் 15 வயதுடைய பிக்கு சந்தேக நபரை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்