ஆசிரியர்களின் தற்போதைய உடையில் மாற்றம் எவையும் ஏற்படுத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடைகள் யார் கேட்டாலும் மாற்றப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டிற்கு ஒரு கலாசார அடையாளம் உள்ளது அதனை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.



