மணிவண்ணன் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்: சகோதரன் சந்திக்கவும் அனுமதி!

Date:

யாழ்மாநகர முதல்வர் வி. மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புபிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றுமதியம்1 மணியளவில் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா போது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் கண்டி விதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை அவரை சந்திப்பதற்காக வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைசெய்யப்படும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியிருந்தனர்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் மணிவன்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரன் அவரை சந்திப்பதற்கு அனுமதிவழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை மணிவண்ணனிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுகெப்பட்டுவரும் நிலையில் அவரது கணனி உட்பட சில பொருட்களும் விசாரணை பிரிவினரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்தும் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் வந்து விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்