26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்திலேயே அதிக தொற்றாளர்கள்!

நேற்று (9) யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று 343 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதை தொடர்ந்து, தொற்றாளர்கள் எண்ணிக்கை 94,336 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து 128 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து 68 பேரும், கம்பஹாவிலிருந்து 39 பேரும், இரத்தினபுரியிலிருந்து 27  பேர், குருநாகலில் இருந்து 9 பேரும், மொனராகலையிலிருந்து 8 பேரும், அம்பாந்தோட்டையிலிருந்து 7 பேரும், களுத்துறை, காலி, புத்தளம் மாவட்டங்களிலிருந்து தலா 4 பேரும், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து தலா 3 பேரும், மாத்தறை, கண்டி, அனுராதபுரம், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாடுகளிலிருந்து வந்த 34 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உள்ளூராட்சி தேர்தலின் முன்னர் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணக்கப்பாடு!

Pagetamil

மாதகலில் 128Kg கஞ்சா சிக்கியது!

Pagetamil

டிப்பரில் கஞ்சா கடத்தல்: சுட்டுப்பிடித்தது பொலிஸ்!

Pagetamil

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Pagetamil

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Pagetamil

Leave a Comment