கிருஸ்ணர் நரகசுரனை அழித்த நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. கிருஸ்ணர் நரகசுரணை அழித்த நாளான தீபாவளி தினமான இன்று, அதனை நினைவூட்டும் வகையில் இன்று குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாகவிருந்து ஆரம்பமான குறித்த நிகழ்வு ஏ9 வீதி ஊடாக, மயிலாட்டம், உயிலாட்டம், பொம்மலாட்டத்துடன் சூரன் வலம் வந்தார்.
பிள்ளையார் கோவில் முன்பாக சூரன் வந்தடைந்ததும், கிருஸ்ணரும் வருகை தந்தார். இதன் போது போருக்கு தயாரான நிகழ்வு பிள்ளையார் ஆலயம் முன்பாக இடம்பெற்றது.
தொடர்ந்து, கிளிநொச்சி நகர் ஊடாக வலம் வந்து பின்னர் கிருஸ்ணர் ஆலயம் சென்று அங்கு நரகாசுரசங்கார நிகழ்வு இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1