நெதர்லாந்து வெற்றி

Date:

ரி20 உலக்கோப்பையின் இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

8வது ரி20 உலக கோப்பை தொடர் அவுஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார்.

7வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது. அதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக 18வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங், மேக்ஸோ இணை துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே விக்ரம்ஜித் சிங் 10 ரன்களுடன் வெளியேறினார். மேக்ஸோ தோவுத் 23 ரன்களிலும், பாஸ் டி லீடே 14 ரன்களிலும், கொலின் அக்கர்மேன் 17 ரன்களிலும் அவுட்டாக 12 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை சேர்த்திருந்தது நெதர்லாந்து அணி.

இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து 19.5 ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ஜூனைத் சித்திக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

spot_imgspot_img

More like this
Related

டிட்வா புயலால் சுமார் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீண்டும் நகர்வு!

டிட்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளினால், கம்பளை – உலப்பனை...

கடுவெல மின்சாதன விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

இலங்கையின் கடுவெல நகரில் அமைந்துள்ள மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை...

அக்குவான் புயல் தீவிரம் – மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதி மற்றும் அதனை அண்மித்த மேற்கு-மத்திய வங்காள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்