வவுனியாவில் இ.போ.ச பேருந்து – துவிச்சக்கர வண்டி மோதி விபத்து: முதியவர் பலி

Date:

வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இ.போ.சபை பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் இன்று (15) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 5.30 இற்கு மன்னார் நோக்கி புறப்பட்ட இ.போ.சபை பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியூடாக குடியிருப்பு நோக்கி சென்ற போது, வைத்தியசாலை வீதியில் இருந்து குடியிருப்பு நோக்கி திரும்பிய துவிசக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மரணமடைந்தவர் வவுனியா, வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா தவராசா (65) என்பவராவார். விபத்தையடுத்து இ.பே.சபை சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்