புகையிரதம் மோதி இரு யானைகள் பலி

Date:

புகையிரத்துடன் மோதுண்டு இரு யானைகள் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் 301.500 புகையிரத வீதி தூர பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமே யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளது. புகையிரதம் சுமார் 1 மணி நேரத்தின் பின்னர் சேவைக்கு திரும்பியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசாரும், வனஜீவராசிகள் திணைக்களமும் தனித்தனியான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்