வரலாற்றை திருத்தியெழுத்திய ஜயசூரியவின் அதிரடி அரைச்சதம்!

Date:

இன்றுதான் (ஏப்ரல் 7) ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை இலங்கை வீரர் சனத் ஜயசூரிய படைத்தார்.

இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தின் தொடக்கமான, 1996ஆம் ஆண்டு நடந்த சிங்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 17 பந்துகளில் அரைசதம் எடுத்து ஜயசூரிய இந்த சாதனையைப் படைத்தார்.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜயசூரியவின் புகழ் உச்சத்தை தொட்ட ஆண்டு என 1996ஐ கூறலாம். இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவர், தனது அதிரடி ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். இந்தச் சூழலில் சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தானை சந்தித்தது இலங்கை.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் கப்டன் அர்ஜுன ரணதுங்க, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 215 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணி களம் இறங்க, முதல் ஓவரிலேயே வக்கார் யூனுஸின் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி, தான் சூப்பர் போர்மில் இருப்பதை பாகிஸ்தானுக்கு கோடிட்டு காட்டினார் சனத் ஜயசூரிய. இதைத்தொடர்ந்து அடார் உர் ரஹ்மான் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் உட்பட 22 ரன்களைக் குவித்த ஜயசூரிய, 17வது பந்திலேயே அரைசதம் அடித்து, மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இப்போட்டியில் ஜயசூரிய 76 ரன்களைக் குவித்தபோதிலும், பாகிஸ்தானின் வலுவான பந்துவீச்சுக்கு இலங்கை அணியால் பதில் சொல்ல முடியவில்லை. 172 ரன்களில் இலங்கை அணி ஆட்டமிழக்க, சிங்கர் கோப்பையை பாகிஸ்தான் வென்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...

பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது!

பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்