நேற்று இந்தியாவில் அதிக தொற்றாளர்கள்!

Date:

நேற்று உலகளவில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இந்தியவில் அடையாளம் காணப்பட்டனர். அதிக மரணங்கள் பிரேசிலில் பதிவானது. அங்கு 4,211 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3வது இடத்தில் நீடிக்கிறது.

ஆனால், ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை இந்தியா விஞ்சியுள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் 82,869 பேருக்கும், அமெரிக்காவில் 62,283 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை பொருத்தவரை பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,211 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 905 பேரும் இந்தியாவில் 631 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...

முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கம் – ரவூப் ஹக்கீம் தலைமையில் முதலாவது கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்