காதல் திருமணம் செய்த யாழ் ஜோடி: வாள்களுடன் விரட்டும் ‘வில்லன்’ உறவுகள்!

Date:

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த காதல் ஜோடியொன்று வீட்டின் சம்மதமின்றி வவுனியாவிற்கு வந்து, அங்கு பதிவு திருமணம் செய்துள்ளனர். அங்குள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று குடியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த குழுவினர், வீட்டு வளாகத்தில் வாடகைக்கு வசித்துவரும் இளைஞரையும், யுவதியையும் தேடியதுடன், அவர்களை காணாத நிலையில் வீட்டின் உரிமையாளர்களை அச்சுறுத்தி, வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

யுவதியின் தரப்பினரே அந்த குழுவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி...

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்