சிறி ரெலோ உதயராசா கைது!

Date:

சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நோர்வேயில் வசிக்கும் புங்குடுதீவு வாசியொருவருக்கு சொந்தமான கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றை மோசடியான ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே அவர் கைதாகியுள்ளார்.

வீட்டு உரிமையாளர் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, வாடகைக்கு பெறப்பட்ட வீட்டை மோசடி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளையடுத்து கல்கிசை பொலிசாரால் ப.உதயராசா கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டார். வரும் 26ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்