தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (2) அல்லது சனிக்கிழமை (3) இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொதுமக்கள் எழுச்சியையடுத்து மாலைதீவுக்கு தப்பியோடிய கோட்டாபய, பின்னர் சிங்கப்பூர் சென்று தங்கியிருந்தார். தொடர்ந்தும் அங்கு தங்க அனுமதிக்கபடாத நிலையில், அரசின் ஏற்பாட்டில் தாய்லாந்து சென்று தங்கியுள்ளார்.
அங்கு ஹொட்டல் அறைக்கு வெளியே தலைகாட்டவும் அனுமதிக்கப்படாமல், மூடிய அறைக்கள் வைக்கப்பட்டுள்ளார்.
இப்படியே தொடர்ந்து தங்கியிருக்க முடியாதென்பதாலும், செலவுகள் எகிறுவதாலும் இலங்கை திரும்ப கோட்டா முடிவெடுத்தார்.
மிரிஹானவிலுள்ள அவரது வீட்டில் தங்கவுள்ளார். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோட்டா இலங்கை வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகளை அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கோட்டா கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இலங்கை திரும்பவிருந்தார்.
எவ்வாறாயினும், அவர் செப்டம்பர் முதல் வாரம் வரை தாய்லாந்தில் தங்கியிருப்பார் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.