யாழில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் மதிய உணவு இடைவேளை பணிப்பகிஸ்கரிப்பு!

Date:

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், மதிய உணவு இடைவேளை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்று ஆளுநருக்கான மகஜரினை கையளித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய வங்கி ஊழியர்களின் பயிற்சிக் காலத்தை 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்துக, அதிகாரிகளே பயிற்சிக் காலத்தினை நீடித்து வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக, அதிகாரிகளே வங்கி ஊழியர்கள் உயிர் வாழ்வதற்கேற்ற ஓய்வூதியக் கொடுப்பனவை உடனே வழங்குக மற்றும் பிரதமரின் உத்தரவிற்கமைய இலங்கை வங்கியின் பயிலுநர் ஊழியர்களை 2 வருடங்களில் நிரந்தரமாக்குக என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...

நாட்டின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்பு

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, நாடு முழுவதும் சுமார்...

அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்