அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

Date:

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று 30.05.2026 காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்: அருமை நண்பர் அஜித் குமார் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மு.க. ஸ்டாலின்: அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.

இபிஎஸ்: திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மு.வீரபாண்டியன்: நடிகர் அஜித் குமாரின் தாயார் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது. அவரது மறைவுச் செய்தி திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரைப் பிரிந்து வாடும் நடிகர் அஜித் குமார், அவரது வாழ்க்கை இணையர் நடிகர் ஷாலினி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புமணி: தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமார் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.

அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு...

தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு

“அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்”...

டுபாயிலிருந்து தப்பியோடும் இலங்கை பாதாள உலக குற்றவாளிகள்

டுபாயில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக காவல்துறை ஒரு இரகசிய நடவடிக்கையைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்