மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 6 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 14 திகதியிடப்பட்டு வழக்கு ஒத்திவைப்பு–

Date:

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, உட்பட்டவர்களை எதிர் வரும் டிசம்பர் 14ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று திங்கட்கிழமை (16) திகதியிடப்பட்டு வழக்கை ஒத்திவைத்து

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மீது  அவதூறாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (21-9-2026) வழக்கு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும் சழுக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கடந்த 28-09-2026 நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இதனையடுத்து குறித்த  வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ்  உட்பட 4 பேர் ஆஜராகினர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, சார்பில் சட்டத்தரணி கௌசல்யா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  எம்.ஹரீஸ் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதிக்கு வழங்கப்படும் திகதியிடப்பட்டு வழக்கை பதில் நீதவான் ஒத்திவைத்தார்.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்