மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

Date:

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி ந.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது வெற்றியடையாத நிலையில், அவரது உடல்நிலை மோசமாகி, தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் , ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் சிவாஜிலிங்கம் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை வழங்கி சென்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி எனும் ரீதியில் குடும்பத்தினரால் எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ந.சிறிகாந்தா, மரண படுக்கையில், சிவாஜிலிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது, அவரது குடும்பத்தினரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் வகையிலும், அவர்களுக்கு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் முகாமாக , சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியுடன் காட்டுக்குகைக்குள் குடித்தனம் நடத்திய ரவிச்சந்திரனுக்கு பிணை!

உடதும்பர காவல் பிரிவுக்கு உட்பட்ட கரம்பகேதிய பகுதியில், மலை உச்சியில் உள்ள...

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்