புத்தூர் மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

Date:

ராஜபாளையம் அருகே புத்தூர் மலையில் வெண்சாந்து ஓவியங்கள் மற்றும் கற்கால மனிதர்களின் குகை வாழ்விடங்கள் வரலாற்று ஆய்வாளர்களின் கள ஆய்வில் கண்டறியப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் மலையடிவாரத்தில் கட்டில் பாறை கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த மலையில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளும், சமணர் படுக்கையும், கற்கால கருவிகளும் கண்டறிபட்டு, தமிழக தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தூர் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் அளித்த தகவலின் பேரில் ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் பிரேம், ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் புத்தூர் மலையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது கட்டில் பாறை கருப்பசாமி கோயிலுக்கு அருகே இயற்கையாக அமைந்துள்ள 3 குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும், குகையின் மேற்பகுதியில் வெண்சாந்து கொண்டு வரையப்பட்ட பாறை ஓவியங்களும் இருந்து கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கள ஆய்வாளர்கள் கூறுகையில்: புத்தூர் மலையில் இயற்கையாக அமைந்த குகைகளை கற்கால மனிதர்கள் தங்கும் இடங்களாக(புடவு) பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன் காரணமாகவே இப்பகுதிக்கு ‘கட்டில் பாறை’ என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். மேலும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் பல இயற்கையான பாறை ஒதுக்கிடங்கள் காணப்பட்டாலும், கண்டறியப்பட்ட இந்த மூன்று குகை அமைப்புகளில் மட்டுமே மழைநீர் உள்ளே கசியாத வகையில் இயற்கையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இக்குகைத் தளங்களில் அரைப்பு தேய்ப்புக் குழிகளும் காணப்படுகின்றன. இத்தகைய சான்றுகளின் அடிப்படையில், இவை அக்கால மனிதர்களின் வாழ்விடங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்..

இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகை தளத்தின் விதானப் பகுதியில் வெண்சாந்து கொண்டு வரையப்பட்ட பாறை ஓவியங்களில் மனிதர்களின் போர்க்காட்சிகள், அக்கால மனிதர்கள் வாழ்ந்த சூழலில் கண்ட விலங்குகளின் உருவங்கள், வாள் மற்றும் கேடயம் போன்ற ஆயுதங்களின் உருவங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இது அக்கால மனிதர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தொல்லியல் சான்றுகளாக விளங்குகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அடுப்பு மூட்டிச் சமைப்பதால், குகைத் தளத்தில் உள்ள பழமையான ஓவியங்களின் மீது கரிப்படிவதால் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாறை ஓவியங்களின் தொன்மையையும், வரலாற்று முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவற்றை பாதுகாக்க தொல்லியல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்