யாழில் நேற்று 5 பேர் பலி

Date:

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நான்கு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்தனர்.

அளவெட்டி, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் காயமடைந்து தெல்லிப்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தின் போது மதில் இருவருக்கும் மேல் விழுந்தமையினாலேயே இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சஞ்சய் (வயது 17) மற்றும் ரஜீவன் (வயது 36) ஆகியோரே உயிரிழந்தனர்.

அளவெட்டிப் பகுதியில் அதிக போதை ஏற்றியதாக சந்தேகிக்கப்படும் 26 வயதையுடைய ஒருவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.

வறுத்தலைவிளான் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த நால்வரின் உடல்களும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் பகுதியில் வயலில் வேலை செய்த ஒருவர் நீரில் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப.பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைவு தீர்மானம்

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம்...

மாவீரர் தினம் – தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் – யாழ் மாநகர சபையில் கடும் அமளி –

மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை...

2026/2027 ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களை முத்திரையிடும் நடவடிக்கை

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்