வெலிமடையில் 7ஆம் தர மாணவியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதி அதிபர் பொலிஸில் சரண்!

Date:

வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் பிரதி அதிபர், 12 வயதுடைய ஏழாம் தர மாணவியைத் துடைப்பத்தின் கைப்பிடி, மரக்கட்டைகள் மற்றும் கையால் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தனது கணவருடன் அம்பகஸ்தோவ பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் மூன்றாவது பாடவேளையின்போது, வழமையான ஆசிரியர் சமூகமளிக்காத நிலையில், வகுப்பறைக்குள் சென்ற பிரதி அதிபர், தரையில் கிடந்த இலைகள் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

இதன்போது, இரண்டு மாணவர்கள் எழுந்து நின்றதைத் தொடர்ந்து, வகுப்பறை வாசலில் வைக்கப்பட்டிருந்த துடைப்பத்தை எடுத்து அதன் கைப்பிடியால் மாணவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மரக்கட்டைகளால் உடலில் குத்தியதுடன், காதிலும் அறைந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவி தனது தாய் மற்றும் தாத்தாவிடம் தெரிவித்ததையடுத்து, ஆரம்பத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் கையில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை பொலிஸார் மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்து அம்பகஸ்தோவ பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்தே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்கிடையில், சம்பவத்திற்குப் பின்னர் பல நாட்களாகப் பொலிஸாரைத் தவிர்த்து வந்த பிரதி அதிபர், தனியார் வைத்தியசாலையில் உயர் இரத்த அழுத்தத்திற்காகச் சிகிச்சை பெற்றதாகக் கூறி, பின்னர் பண்டாரவளைப் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்குப் பின்னர் அவர் பாடசாலைக்கும் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (31) தனது கணவருடன் பொலிஸில் சரணடைந்த பிரதி அதிபர், வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, பதில் நீதவான் எஸ்.பி. சமரக்கோன் அவரை 2 இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி தற்போது வீடு திரும்பியுள்ளார்.

ஊவா மாகாணம் மற்றும் பதுளை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் கீழ், அம்பகஸ்தோவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்