மட்டக்களப்பில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

Date:

மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் தன்வசம் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த   வாழைச்சேனை சேர்ந்த 29 வயதுடைய முகமது றிஸ்வி என்பவருக்கு 7  வருட கடூழிய சிறைத் தண்டனையும்  ஒரு இலட்சம் ரூபா அபராதமாக  செலுத்துமாறும்  அதை செலுத்த  தவறினால் 2 வருட சிறைத் தண்டனையை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்

கடந்த 2020 ம் ஆண்டு 1.147 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த நபரை பொலிசார் கைது செய்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் மட்டு மேல் நீதிமன்றத்திற்கு 2022ம் ஆண்டு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இந்த  நிலையில் வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி..தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வந்தனர் இதன் போது குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் கடந்த 14 ம் திகதி (2026-10-14) இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு  29-10-2026 என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் குறித்த நபரின் முதலாவது குற்றமான ஹெரோயின் போதைப்பொருள் தன் வசம் வைத்திருந்த குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமாக  செலுத்துமாறும் இரண்டாவது குற்றமான ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்த குற்றத்தில் இருந்து விடுவித்து ஒரு இலட்சம் ரூபா அபராதத்தை செலுத்த தவறினால் 2 வருடம் சிறை தண்டனையை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை  தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் கடற்படையும் மதுவரித் திணைக்களமும் இணைந்த விசேட நடவடிக்கை- 6 கிலோ மூக்குத்தூளுடன் சந்தேகநபர் கைது

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட...

கல்முனை உப பிரதேச செயலாளர் தன்னை “பிரதேச செயலாளர்” எனக் குறிப்பிடும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் முன்வைப்பு

கல்முனையன்ஸ் போரம் சார்பில் மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களினால் தாக்கல்...

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்