இந்தியாவை உலுக்கிய அர்னாப் புயல்! 6 பேர் பலி; 15,000 மின்கம்பங்கள் சேதம்!

Date:

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய அர்னாப் புயலால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், பல பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கி ஒரு நாள் கடந்த நிலையிலும், சில பகுதிகளில் மின்சார விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், மின்சாரம் தாக்கியதாலும் மரங்கள் மற்றும் வீடுகள் சரிந்து விழுந்ததாலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் மிகவும் தீவிரமான புயலாக வகைப்படுத்தப்பட்ட அர்னாப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை ஊடறுத்துச் சென்றது. இந்த வகைப்பாடு, திணைக்களத்தின் புயல் தீவிரத்தன்மை அளவுகோலில் மூன்றாவது உயர்ந்த வகையாகும்.

புயலின் தாக்கத்தினால் குறைந்தது 15,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பெரும்பாலான மாவட்டங்களில் மின்சார விநியோகம் மீளமைக்கப்பட்டுள்ள போதிலும், கொனசீமா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, புயலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் காண முடிந்ததாகவும், இதன் மூலம் உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைக் குறைக்க முடிந்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 20 பணியாளர்களுடன் பயணித்த மார்ஷல் தீவுகளின் கொடியைக் கொண்ட சரக்குக் கப்பலொன்று ஆந்திரப் பிரதேசக் கடற்கரைக்கு அருகில் தரைதட்டி நிற்கிறது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால், வியாழக்கிழமையும் அந்தக் கப்பலை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட முடியாத நிலை காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் கரையைக் கடப்பதற்கு முன்னதாக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து 1,80,000-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், புயலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு சில பாடசாலைகள் மூடப்பட்டதுடன், சில ரயில் மற்றும் விமானச் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.

வங்காள விரிகுடாவில் உருவான அர்னாப் புயல், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் வெப்பமண்டலப் புயல்களின் தொடரில் ஒன்றாக அமைந்துள்ளது. புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்