அச்சினி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

Date:

அருணா விதனகமகே (என்கிற கஜ்ஜா’) மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற, இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபரான ‘அச்சினி’ என்றழைக்கப்படும் அனோஷா லக்மாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (27) ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மித்தெனிய, கட்டுவானப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இந்த பெண், கொல்லப்பட்ட ‘கஜ்ஜா’வுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை நடப்பதற்குச் சற்று முன்பு, ‘கஜ்ஜா’வுக்கு இறுதியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதும், குறுஞ்செய்தியை அனுப்பியதும் இவரே என்பது விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ‘பேக்ஹோ சமன்’ என்று அழைக்கப்படும் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், ‘கஜ்ஜா’வையும் அவரது இரு பிள்ளைகளையும் உணவருந்துவதற்காக குறித்த உணவகத்திற்கு இவர் தந்திரமாக வரவழைத்துள்ளார். அவர்கள் அங்கு உணவருந்திக் கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த மூன்று பேர் படுகொலைச் சம்பவம் கடந்த ஆண்டு பெப்ரவரி 18 அன்று இடம்பெற்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த சந்தேக நபர், தான் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப முயன்றபோது, ​​ஓகஸ்ட் 30 அன்று ஷார்ஜாவில் (துபாய்) வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

‘கஜ்ஜா’வின் படுகொலைக்குப் பிறகு, அதில் தனக்குத் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, தான் மார்ச் 5, 2025 அன்று தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குத் தப்பிச் சென்றதாக அவர் கூறினார். அதன்பிறகு தான் மலேசியாவுக்கும், அங்கிருந்து துபாய்க்கும் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்