மட்டு செட்டிபாளையத்தில் வீடு ஒன்றில் இருந்து 60 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் 3 உடன் ஒருவர் கைது

Date:

மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்குவலை வைத்திருந்த  ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்புக்கு மீனவர்கள் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றை அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு வழங்கியதையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன் போது குறித்த வீட்டில் இருந்து சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்கு வலையை  வைத்திருந்த அதன் உரிமையாளரான மீனவர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து சுருக்கு வலைகளை கைப்பற்றிய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக சட்டவிரோத சுருக்கு வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இவரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில்  இன்று திங்கட்கிழமை   ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்