மன்னாரில் இராணுவ ஜீப் விபத்து: ஒருவர் பலி

Date:

தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் வேகமாக வந்த இராணுவம் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதுடன் அதில் பயணித்த இராணுவ வீரர்களில் ஒருவர் உயிர் இழந்ததுடன் அதில் பயணித்த ஏனையவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (24.10) மாலை 4.20 மணியளவில் தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவில் நடுக்குடாவுக்கும் கீழியன்குடியிருப்புக்கும் இடைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தலைமன்னார் மன்னார் வீதியில் அமைந்துள்ள செல்வபுரி என்னும் இடத்திலுள்ள இராணுவ முகாமிலிருந்து டிபென்டர் ரக வாகனம் ஒன்றில் 12 இராணுவ வீரர்கள் மன்னார் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தனர்.
மிக வேகமாக வந்த இந்த வாகனம் நடுக்குடாவுக்கும் கீழியன்குடியிருப்புக்கும் இடைப்பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் காணப்பட்ட பனை மரங்களுடன் மோதியதில் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியது. அதில் பயணித்த 12 இராணுவ வீரர்களும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர்.
இதில் ஒருவர் இறந்ததுடன் ஓரிருவரைத் தவிர ஏனையோர் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்துக்கு உள்ளானவர்கள் யாவரும் அருகிலுள்ள பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மாலை 4.30 மணியளவில் பேசாலை வைத்தியசாலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே விபத்தில் காயமுற்றவர்களை பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோது நேரில் பார்வையிட்டார்.
spot_imgspot_img

More like this
Related

அச்சினி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

அருணா விதனகமகே (என்கிற கஜ்ஜா’) மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை...

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்