சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைகிறது!

Date:

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

அவர் சில நாட்களாக சுயநினைவிழந்த நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக குடும்ப வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.

சில மாதங்களின் முன்னர் சிவாஜிலிங்கம், கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றார். எனினும், சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றியளிக்கவில்லை.

அதை தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது.

பின்னர், அவர் யாழ்ப்பாணம் நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வந்தது.

கடந்த சில நாட்களாக அவர் சுயிநினைவிழந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் கடற்பகுதி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டுள்ளது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்