திகாவாபியில் காட்டு யானைகளின் தொடரும் தாக்குதல்கள்

Date:

அம்பாறை மாவட்டம்  திகாவாபி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொடர்ச்சியான நடமாட்டத்தாலும் தாக்குதல்களாலும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் நிலவிவரும் காட்டு யானைகளின் தீவிரத் தாக்குதல்களால், தென்னை, வாழை உள்ளிட்ட பல இலட்சக்கணக்கான பெறுமதியான பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித-யானை மோதல்களானது ஒரு தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், “இது யானைகளின் தவறா அல்லது நம்முடைய (மனிதர்களின்) தவறா?” என்பதாகும். பெரும்பான்மையான மக்கள் இதன் உண்மையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இயற்கையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகச் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த...

இந்திய அரசின் நிதியுதவியுடன் காலியில் அமைக்கப்பட்ட 22-வது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு–

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் 'திடுலா'  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட...

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை விரட்டியடித்தது இலங்கை!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்