திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

Date:

கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் நேற்று மாலை (17) மேற்கொண்ட சோதனையின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹன்வெல்ல வீதியில் அமைந்துள்ள இந்த திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, குறித்த ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. சந்தேக நபர் மில்லத்தவைச் சேர்ந்தவர் ஆவார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12-போர் (12-bore) ஷொட்கன் ஆகியவை அடங்கும்.

மேலும், 12-போர் ரக தோட்டாக்கள் 398-ம், 16-போர் ரக தோட்டாக்கள் 278-ம், .32 ரக தோட்டாக்கள் 49-ம், மற்றும் கூடுதலாக .32 ரகத்தைச் சேர்ந்த மேலும் 3,083 தோட்டாக்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

அங்கு இரண்டு கைக்குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...

கள்ளக்காதலை பெருமையடித்து திரிந்த செந்தூரன்: கடுப்பான கணவனின் விபரீத முடிவு!

நுரைச்சோலை, கரம்ப கார்மென்ட் வத்த பகுதியில், முறையற்ற உறவு தொடர்பான மோதல்...

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்