சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

Date:

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) சிறப்பாக இன்று  நடைபெற்றது.

சர்வதேச சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலகளாவிய ரீதியில் சமாதானம், சமூகப் பணி மற்றும் மனிதநேயச் செயற்பாடுகளுக்காகப் பங்காற்றிய சிறந்த 100 ஆளுமைகளைச் கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வு அமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட நேபாளத்தின் இலங்கைக்கான தூதுவரால்    விருதுக்குத் தெரிவான சாதனையாளரான உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்திற்கு சர்வதேச விருது வழங்கி உத்தியோகபூர்வமாகக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வதேச அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள், தூதரக உயர் அதிகாரிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...

2,190 மில்லிகிராம் ஹெரோயினுடன் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச்...

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்