சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு – ஒருவர் கைது

Date:

வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு – ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – தென்மராட்சி
கொடிகாமம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில், சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (03) காலை 11 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வன்னிப் பிரதேசத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கன்டெய்னர் லொறி ஒன்றில் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்படுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸநாயக்க தலைமையிலான பொலிஸ் அணியினர் விரைந்து செயற்பட்டு, குறித்த கன்டெய்னர் லொறியை எழுதுமட்டுவாள் பகுதியில் வைத்து வழிமறித்துள்ளனர்.
எனினும், லொறியின் சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை நிறுத்தாமல் மிருசுவில் வீதியூடாக தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து பொலிஸார் குறித்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், மன்னங்குறிச்சி வீதியூடாகச் சென்று மீண்டும் கிளிநொச்சி நோக்கி தப்பிச் செல்ல முயன்ற நிலையில், எழுதுமட்டுவாள் கண்டல் நீரேரிப் பகுதியில் பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைத்து லொறியை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, கன்டெய்னர் லொறியில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
spot_imgspot_img

More like this
Related

‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் எப்படி? – முத்துவேல் பாண்டியனின் அதகளம்

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி...

மேடையில் பிடுங்குப்பட்ட தற்குறிகள்!

திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல்...

மீண்டும் சிறை திரும்பினார் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்