குற்றவாளிகளுடன் இணைந்து சரக்கடித்த மட்டக்களப்பு பொலிஸ்காரரின் நிலை!

Date:

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம் அருந்திய வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (01) இருந்து பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ தினமான கடந்த 29 திகதி செவ்வாய்க்கிழமை இரவு கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கு.ஜனுஷன், 36 வயதுடைய அ.யோகேஸ்வரன் ஆகிய இருவருடன் இணைந்து மதுபானம் அருந்தினார்.

இந்த நிலையில் கு.ஜனுஷன் மற்;றும் அ.யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து இருவரும் மாறி மாறி தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்ததையடுத்து இருவரையும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த இருவருடனும் பொலிஸ் உத்தியோகத்தர் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளதாகவும் குறித்த இருவருக்கும் இடையே சண்டை இடம்பெற்றபோது பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் குறித்த இருவரும் கசிப்பு வியாபாரம் மற்றும் போதைப்பொருள் வியாபாரம், கொள்ளை போன்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குற்ற செயல்களுடன் தொடர்புபட்டவர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய குற்றத்தினையடுத்து அவரை நேற்று வியாழக்கிழமையில் இருந்து பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்