திலினி பிரியமாலியை கைது செய்ய உத்தரவு

Date:

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் திலினி பிரியமாலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கான பிணைதாரர்கள் என்று கூறிக்கொண்டு இருவர் நீதிமன்றத்தில் ஆஜரான போதிலும், அவர்கள் உண்மையான பிணைதாரர்கள் அல்ல என்பதைக் கண்டறிந்த நீதவான், கைது வாரண்டைப் பிறப்பித்தார்.

திலினி பிரியமாலி மற்றும் ஐவர் மீதான நிதி மோசடி தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​வேறு சில சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்களுக்காகப் பிணைதாரர்கள் ஆஜரான நிலையில், மற்றொரு சந்தேக நபரான ஜானகி சிரிவர்தனாவின் சட்டத்தரணி, அவர் தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பொரல்ல சிரிசுமன தேரர் நீதிமன்றத்தில் ஆஜரானார்; அவர் வெளிநாடு செல்வதற்கு விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. திலினி பிரியமாலி மற்றும் ஏனையோர் மீதான அனைத்து வழக்குகளையும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

நீல நிறம் பூசி லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களாக மாற்றி மோசடி – மூவர் கைது!

சந்தையில் நிலவும் மஞ்சள் நிற லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு தட்டுப்பாடு மற்றும்...

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்