மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்- பொலிஸ் பாயிஸ் தொடர்ந்து பிடிவிறாந்து

Date:

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும்  ஒக்டோபர் 13 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று  செவ்வாய்க்கிழமை (29 ) காணொளி ஊடாக உத்தரவிட்டார்.

2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட  இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்துடன்  தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர் பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து  அவர்களை நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்பட்டு  அவர்களை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (29)  திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை ஆஜர்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் ஆஜர்படுத்தினர்.
இதனை தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து  எதிர்வரும் 13 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும்  முகமட் பாய்ஸ் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்