இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
எனினும், அவர் கொழும்பில் இல்லாததால், அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய சகாவொருவரின் தகவலின்படி, CIABOC அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வருவதற்கு முன்னரே அவர் கொழும்பிலிருந்து வெளியேறியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஜயத்திற்கான மேலதிக காரணங்கள் அல்லது விசாரணை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.




