சாய்ந்தமருதில் இறைச்சிக் கடைகள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனை

Date:

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் இன்று (29) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பரிசோதனை நடவடிக்கையில் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார நடைமுறைகள், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் பணியாளர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.

குறிப்பாக, உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மருத்துவப் பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதும் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.

சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் சுகாதாரமான சேவைகளை வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்களில் சுகாதாரத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 675 ஆக உயர்வு

இந்த வாரம் சீனாவுடனான எல்லைக்கு அருகே ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நேபாளத்தில்...

யுவதியை கடத்திச் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ்...

காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி முழுமையான ஆதரவு! – மு. சந்திரகுமார்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்