மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

Date:

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தவர் கால் உடைந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இரவு இடம்பெற்றதையடுத்து பொலிஸ் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டி சம்பவ தினமான நேற்று இரவு சிறைச்சாலை நோக்கி பிரயாணித்து கொண்ட போது சிறைச்சாலை சந்தியில் கோவிங்டன் வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரின் கால்; உடைந்து படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸ்      வண்டியை செலுத்தி சென்ற பொலிஸ் சாரதியை கைது செய்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன்...

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக...

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்