சாய்ந்தமருதில் இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கு புலமைப் பரிசில் வழங்கி வைப்பு

Date:

சமுர்த்தி அபிவிருத்தி  திணைக்களத்தின் தேசிய வலுவூட்டல் மாதத்தை முன்னிட்டு சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் அஸ்வெசும நலன் உதவி பெறும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கான (NVQ Level) புலமைப்பரிசில் அனுமதி கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட 18 இளைஞர்,  யுவதிகளுக்கு அதிதிகளினால் புலமைப் பரிசில் அனுமதிக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர்  ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எஸ். றிபாயா, வங்கி முகாமையாளர் ஏ. எம். இக்ராம், கருத்திட்ட உதவியாளர் என்.எம். நௌசாட், சமூக அபிவிருத்தி  உதவியாளர் யூ.எல் ஜஃபர், வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞர்,  யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்