செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள்

Date:

செம்மணி மனித புதைகுழியில்
புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றபோதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 524 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .
516வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில் மீட்கப்பட்ட தாயத்து போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டது.
spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்